இழுபறியில் ஆளுநர்கள் நியமனம்: ரணில் மீது அதிருப்தியில் மொட்டு கட்சி..!
ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் மேலும் தாமதமாகின்றன. இதனால் மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகின்றது.
மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமன விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சில மாதங்களுக்கு முன் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டுக் கட்சி சார்பில் ஐந்து ஆளுநர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான்கு ஆளுநர்களும் நியமித்தல் என்பதே அந்த இணக்கப்பாடு என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குற்றஞ்சாட்டு
இந்நிலையில், ஜனாதிபதி எவ்வித காரணமுமின்றி அந்த நியமனங்களை இழுத்தடிக்கின்றார் என்று மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, அமைச்சரவை நியமனம் கூட அப்படியே கிடக்கின்றது. இதனால் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள் என்று
அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
