சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட குழு நியமிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்றி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri