யாழ். மறைமாவட்டத்தின் 12வது ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பதவியேற்பு
யாழ். மறை மாவட்டத்தின் 12வது ஆயராக திருத்தந்தையால் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று(26.08.2026 புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்துவரப்பட்டார்.
12வது ஆயர் நியமனம்
இதனைத் தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இந்த திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்தியாவிற்கு திட்டமிட்டு கடத்தப்பட்ட இளம்பெண்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான இரட்டைக்கொலை திட்டம்






