கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளர் நியமனம்
கிளிநொச்சி (Kilinochchi) இரணைமடுக்குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளராக, பொறியியலாளர் பிரகாஸ் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்பபாசனக் குளமான வவுனிக்குளத்தின் நீர்பாசனப் பொறியியலாளராக இதுவரை காலமும் பணியாற்றிய இவர் இன்று (03.06.2024) முதல் புதிய நீர்ப்பாசன பொறியியலாளராக கடமைகளை ஏற்கவுள்ளார்.
நெற்செய்கை
இவர் கடந்த காலங்களில் வவுனிக்குளத்தின் கீழ் சரியான நீர் முகாமைத்துவத்தினை மேற்கொண்டு பெரும்போக மற்றும் சிறுபோக செய்கைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அயராது உழைத்தவர்.
மேலும், வரட்சியின் போது நெற்செய்கை மற்றும் சிறுதானிய செய்கை என்பவற்றை வெற்றிகரமாக செய்து மாவட்டத்தின் நெல் உற்பத்திக்கு பெரும்பங்காற்றியவராக வவுனிக்குளம் விவசாயிகளால் மதிப்பளிக்கப்படும் நிலையில் இன்று தமது கடமைகளை ஏற்கவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
