மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
இலங்கையின் பிரதான பௌத்த பீடங்களையும் சேர்ந்த மஹாநாயக்க தேரர்களும் நிலையான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலையான அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை இதுவரை நியமிக்க முடியாமை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பதவியில் இருந்த கணக்காய்வாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் அரசின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு தரப்புகள் முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகளை உருவாக்க முயற்சித்து வருவதாக மஹாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் கணக்காய்வாளர் நாயக பதவிக்கு, கணக்காயர் திணைக்களத்துக்கு வெளியேயுள்ள ஒருவரை நியமிப்பது பொருத்தமற்றது என மஹாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, கணக்காயர் திணைக்களத்தில் நீண்ட கால அனுபவத்துடன் சேவை புரிந்துள்ள மூத்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதே உகந்தது என தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நாட்டை செழிப்பாக்கும் கொள்கை மற்றும் செயல் திட்டங்களுக்கு கூடுதல் வலுச்சேர்க்கும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam