கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களில் கிண்ணியா கல்வி வலய வெற்றிடங்கள் முழுமையாக உள்வாங்கப் படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வெற்றிடங்களை முழுமையாக உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூஃப்(Imran Maharoof) கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சு செயலாளருக்கு இன்று (04)அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.,
[YYMUULJ ]
ஆசிரியர் வெற்றிடங்கள்
சமீப காலத்தில் ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து இடைநிறுத்த பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக் குழுவினால் தற்போது விண்ணப்பம் கோரப் பட்டுள்ளது.
இதில் கிண்ணியா கல்வி வலயத்தில் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் முழுமையாக உள்வாங்க படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி ஆசிரியர் தொழில் சங்கத்தினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது.
ஆரம்பக் கல்வி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, தமிழ், இஸ்லாம் போன்ற பல பாட ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற போதிலும் இவற்றில் சில பாடங்கள் விண்ணப்பம் கோரும் அறிவித்தலில் உள்வாங்க படவில்லை.
இதனால் கிண்ணியா கல்வி வலய கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது எனவே சகல வெற்றிடங்களையும் சரியாக கணித்து விண்ணப்பம் கோர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Y2TOOIG ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
