யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் தம்மை மாகாண சபைக்கு விடுவிக்குமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பி்ரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் தன்னை மாகாண சபைக்கு விடுவிக்குமாறு மாவட்ட அரச அதிபரிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.
யாழ். மாவட்ட நிர்வாகத்தில் மேலதிக அரச அதிபர் பதவிகள் மற்றும் பிரதேச செயலாளர் நியமனங்களில் கடும் பனிப்போர் நிலவுவதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் ஒரு பிரதேச செயலாளர் விரைவில் தன்னை மாகாண சபைக்கு விடுவிக்குமாறு விண்ணப்பிக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்தன.
விடுவிப்பு கடிதம்
இவ்வாறு செய்திகள் வெளிவந்த சில நாள்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் மாவட்ட அரச அதிபர் ஊடாக விண்ணப்பித்துள்ளார் என அறிய வந்தது.
பிரதேச செயலாளர் விடுவிப்புக் கோரி விண்ணப்பித்துள்ளமை தொடர்பில் மாவட்ட அரச அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது விண்ணப்பக் கடிதம் கிடைத்ததை அவர் உறுதி செய்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
