கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வோருக்கு விண்ணப்பப் படிவம் விநியோகம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இம்முறை இலங்கையில் இருந்து 4000 பேரும் தமிழகத்தில் இருந்து 4000 பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவம் தொடர்பான அறிவிப்பு
கச்சதீவு திருவிழாவிற்கு வருகைதரவுள்ள தமிழக பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை வழங்க முடியும் என என ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து குறித்த திருவிழாவில் கலந்து கொள்வோர் அதற்காக மாவட்ட செயலகம் மற்றும் கடற்படையினரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |