பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ஐபோன் : யுவதிகளை இலக்கு வைத்து நடந்த மோசடி அம்பலம்
பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ஐபோன் விற்பனை செய்வதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன.
அதற்கமைய, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி பேஸ்புக் கணக்கின் மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட யுவதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மோடலிங் போட்டியில் வெற்றி பெற்றால், ஐபோன் இலவசமாக வழங்கப்படும் எனவும் குறித்த நபர் கூறியுள்ளார்.
ஏமாற்றப்படும் பெண்கள்
அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களை தகாத முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
பணம் தராத இளம் பெண்களை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பணப் பரிமாற்றம்
அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவர்களும் செய்திகளை பரிமாறிக்கொண்டதால், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |