மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சஷி வீரவங்ச சார்பில் மேன்முறையீட்டு மனு
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சார்பில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி தகவல்களை உள்ளடக்கி முறைகேடான வகையில், உத்தியோகபூர்வ கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொண்ட வழக்கில் சஷி வீரவங்சவுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2022ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரது சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் வாரத்திற்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சஷி வீரவங்ச சார்பில் மீண்டும் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam