அநுரவின் பேச்சை உள்ளூர் தமிழ் பேச்சுவழக்குக்கு மாற்றியமைத்து பாராட்டை பெற்ற ஆதரவாளர்
தேர்தல் பேரணிகளில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை மொழிபெயர்ப்பது, அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு கூட கடினமாகவே கருதப்படுகிறது.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க போன்ற திறமையான பேச்சாளர்களின் பேச்சை ஒரே நேரத்தில் வேறொரு உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான பணியாகும்.
அண்மையில், புத்தளத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியில் திஸாநாயக்க பேசுகையில், அவரது உரையை ஒரே நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்குமாறு உள்ளூர் கட்சி ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
உள்ளூர் பேச்சுவழக்கு
இதனையடுத்து மொழிபெயர்ப்பாளர் தனது மொழியாக்கத்தை உள்ளூர் பேச்சுவழக்கில் மாற்றியமைத்தார்.
இது, உள்ளூர் பார்வையாளர்களின் பலத்த கைதட்டலை பெற்றது
இதனை கவனித்த அநுரகுமார திசாநாயக்க, மொழிபெயர்ப்பாளரின் தோளைத் தட்டி அவரைப் பாராட்டி தனது உரையைத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
