அநுராதபுரத்தில் வைத்தியர்களுக்கிடையில் மோதல்! ஒருவர் காயம்
அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் வைத்தியர் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அலுவலகத்தில் குறித்த இரண்டு வைத்தியர்களுக்கும் இடையிலான மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோதலுக்கான காரணம்
இதன்போது வைத்தியர் ஒருவர் தன்னுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மற்றையவைத்தியரை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை கடமைகள் தொடர்பான வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




