கரட் துண்டினால் 19 மாத குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
அனுராதபுரம் பகுதியில் 19 மாத குழந்தையொன்று கரட் துண்டொன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சாலியவெவ - யாய ஹத்தா பகுதியில் வசித்து வந்த சவின் துல்சந்த உபாத்யாய் என்ற ஒரு வயது ஏழு மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பொலிஸார் விசாரணை
கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்த பெற்றோர்கள் குழந்தையை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri