அனுரவை சந்தித்த ஜப்பானிய தூதுவர்
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(19.03.2024) காலை மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இரு தரப்பும் விரிவாக கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு தொடர்பான தமது நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தியினர் ஜப்பானிய இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளனர்.
இந்நிலையில் தமது நாடு, இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு ஜப்பானின் தயார்நிலையை ஜப்பானிய பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
ஜப்பானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கட்சுகி கோட்டாரோ மற்றும் இரண்டாவது செயலாளர் இமாய் கௌரி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |