அனுரகுமார திஸாநாயக்கவால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: ஆய்வில் வெளியான தகவல்
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 பேர் தெரிவித்துள்ளனர்.
36.6% பேர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கடியைத் தீர்க்கும் திறன் இருப்பதாக நம்புகிறார்கள்,

அதே நேரத்தில் 29.1% பேர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.
23.7% பேர் டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்,
மேலும் 18.3% பேர் பிரதமர் தினேஷ் குணவர்தன பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.
மேலும் 11.9% பேர் முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என நம்புகின்றனர் என்று
இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam