அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து: பறிபோன யாழ். குடும்பஸ்தரின் கால்
அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த விபத்து, நேற்றையதினம்(02.04.2025) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்.
காலை அகற்ற வேண்டிய நிலை
இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது, அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
