தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி அநுரவுக்காக ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Vethu Oct 02, 2024 11:04 AM GMT
Report

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திசாநாயக்க சிறுபான்மை மக்களின் அதீத ஆதரவை பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் அதீத நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியாக அநுர திகழ்வதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

நெருக்கடியாக மாறும் அரச வருமானம்: திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடப்படும் அபாயம்

நெருக்கடியாக மாறும் அரச வருமானம்: திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடப்படும் அபாயம்

அதிகரித்துள்ள வாக்கு பலம்

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குபலம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி அநுரவுக்காக ஏற்பட்டுள்ள மாற்றம் | Anura Won Tamil Muslim Peoples Heart

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 1,375 வாக்குகள் பெறப்பட்டன. அது 0.37 வீதமாகும். எனினும் இம்முறை 27,086 வாக்குகளாக அதிகரித்துள்ளது.

இது யாழ். மாவட்டத்தில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் 7.29 சதவீதம், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 25,711 வாக்குகள் அதிகமாகும். அனைத்து மாவட்டங்களிலும் அதிக வளர்ச்சி பெற்ற மாவட்டமாக யாழ் மாவட்டம் மாறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் வன்னி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி 1,156 வாக்குகளை பெற்றது. இது அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 0.54 சதவீதமாகும். எனினும் இம்முறை 21,412 வாக்குகள் பதிவாகியுள்ளன, இது செல்லுபடியாகும் வாக்குகளில் 9.86 சதவீதமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு மேலதிகமாக 20,256 வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி அநுரவுக்காக ஏற்பட்டுள்ள மாற்றம் | Anura Won Tamil Muslim Peoples Heart 

அத்துடன், 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,304 வாக்குகள் கிடைத்தன, இது 0.76 வீதமாகும்.

எனினும் இம்முறை அது 38,832 வாக்குகளாக அதிகரித்துள்ளன. இது 12.19 சதவீதமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை அதிகரித்த வாக்குகளின் எண்ணிக்கை 36,528 ஆகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்பதே தற்போதைய பேசும்பொருளாக மாறியுள்ளது.

வடபகுதியில் தேசிய மக்களின் சக்தியின் அலையானது இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பினை ஏற்படத்தலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


போர்குற்றச்சாட்டு விசாரணைக்கு அநுர அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்: ஜெய்சங்கரிடம் கோரிக்கை

போர்குற்றச்சாட்டு விசாரணைக்கு அநுர அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்: ஜெய்சங்கரிடம் கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து அநுரவுக்கு வந்த தனிப்பட்ட செய்தி

ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து அநுரவுக்கு வந்த தனிப்பட்ட செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US