அநுர வெற்றியீட்டியதாக பதிவிட்ட நாமலின் சகா!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றியீட்டியதாக மொட்டு கட்சியின் பிரதான இளம் செயற்பாட்டாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவருமான மிலிந்த ராஜபக்ச இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்
மக்களின் ஆணைக்கு அடி பணிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அநுர தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
பொதுஜன முன்னணியுடன் அரசியல் கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக மிலிந்த ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் என அவர் மேலும் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
අනුර කුමාර දිසානායක චන්දය දිනුම්. නාමල් රාජපක්ෂ දේශපාලනය දිනුම්. ජනමතයට ගරු කරමු. මැතිවරණය නිදහස් සහ සාධාරණව පැවැත්වුණි. පොදුජන පෙරමුණ සමග අපේ මතවාදය ඉදිරියට ගෙනයන්නට කැපවෙමි. හැමෝටම සුභ පැතුම්. #lka #srilankadaily
— Milinda Rajapaksha (@milindarj) September 21, 2024