இதற்கு மேல் எதையும் கேட்க வேண்டாம்! ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை
வரவு செலவுத் திட்டத்தில் உச்ச அளவு நலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேல் கேட்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அரசாங்கம் பயந்து கொண்டு கேட்பனவற்றையெல்லாம் வழங்கும் அரசாங்கம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொடுக்க முடியாதவற்றை கேட்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சூழ்ச்சி திட்டங்கள்
இவ்வாறான சூழ்ச்சி திட்டங்களுக்கு இந்த அரசாங்கம் அடிபணியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கேட்கக் கேட்க அஞ்சி கொண்டு அடிபணிந்து கோரிக்கைகளுக்கு வழங்கப் போனால் அரசாங்கம் கவிழும் என அவர் கூறியுள்ளார்.

கேட்கும் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வழங்கக்கூடிய அதிகபட்சமானவற்றை வழங்கியுள்ளதாகவும் அதற்கு மேல் இதனையும் வணங்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
சிலர் அடுத்த ஏப்ரலில் நெருக்கடி வரும் அடுத்த டிசம்பரில் நெருக்கடி வரும் என கூறி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். உண்மையில் நெருக்கடியை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்றால் திரைச்சேரிக்கு தாங்கிக் கொள்ள முடியாத சுமையை கொடுப்பதன் மூலம் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரைசேரிக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவு செலவினை ஏற்படுத்தி நெருக்கடிக்குள் தள்ள முயற்சி எடுக்க முடியும் என்ற போதிலும் அரசாங்கம் அந்த சதி வலையில் சிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி பல்வேறு அரசதுறை பணியாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட நலன்களை கோரி தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்க உள்ள நிலையில் ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.