திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய விரும்பும் அனுர
எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளருடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கந்தளாயில் நடைபெற்ற பேரணியின்போது அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிடம் 99 எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் உள்ளன. ஒரு தொட்டியில் 10,000 மெட்ரிக் டன்கள என்ற அடிப்படையில் மொத்த தொட்டி பண்ணைகளில்; ஒரு மில்லியன் மெட்ரிக் டன்கள் சேமிக்க முடியும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்
எனவே, தேவைக்கு அதிகமாக சேமிப்பு திறன் உள்ளது. திருகோணமலை துறைமுகம் ஒரு மூலோபாய இடத்தில் அமைந்துள்ளது.
இந்தநிலையில், திருகோணமலையில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிறுவி சேமிப்பு தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை சேமித்து துறைமுகம் வழியாக ஏற்றுமதிச் சந்தைக்கு அனுப்ப விரும்புவதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
தனியாக திட்டத்தை ஆரம்பிக்க முடியாது என்று கூறிய திஸாநாயக்க, வெளிநாட்டு முதலீட்டாளருடன் கூட்டு முயற்சியாக திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணைக்கு, தமது அரசாங்கம் உயிர் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |