ஜனாதிபதி அநுரவின் முதல் வெளிநாட்டு பயணம் தீர்மானிக்கப்பட்டது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக அனுரகுமார இந்தியா செல்லவுள்ளார்.
எனினும், இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்
பெரும்பாலும், ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அனுரகுமார திஸாநாயக்கவை, முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகராக ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
