அநுரவின் விசேட SFபாதுகாப்பு தொடர்பில் இரகசிய தகவல்
SF எனும் விசேட இராணுவ படையினரின் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் இனி பாதுகாப்பு பிரச்சினை முக்கிய சவாலாக மாற உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் விசேட அதிரடிப்படையினர் மூலமும், விசேட இராணுவ படையினரின் மூலமும் சிறப்பு படை ஒன்றை உருவாக்கி உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜேவிபி தனது புலனாய்வு நடவடிக்கை மூலம் என்ன அடுத்து நடைபெறப்போகின்றது என்பதை ஊகித்து அறிந்திருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
