ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15.11.2024) 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
பின்னர் இந்திய அரசாங்கத்தின் பல பலம் வாய்ந்த அமைச்சர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்துவார் மற்றும் இலங்கைக்கு இடையில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக திட்டத்தில் இந்தியாவும் இணைந்துகொள்ளும்.
புத்த கயாவிற்கு விஜயம்
பின்னர் ஜனாதிபதி புத்த கயாவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், ஜனாதிபதியுடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், இந்தியப் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அநுரகுமார் திஸாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |