அநுரவின் முடிவுகளால் வெகுவிரைவில் கதிகலங்க போகும் தென்னிலங்கை
பட்டலந்த முகாம் தொடர்பான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் முடிவுகள் தென்னிலங்கையை கதிகலங்க வைப்பதாக இருக்கும் என அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் தற்போது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக தமிழ் மக்கள் படுகொலை விவகாரம் தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
