ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்
ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அநுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும், பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்கவைத்தனர்.
இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்ததாகவும், அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri