ஏதாவது ஓர் வழியில் இந்த வருடம் ஆட்சி கைப்பற்றப்படும் : அனுரகுமார சீற்றம்
ஏதாவது ஓர் வழியில் இந்த ஆண்டில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள தயார்.

பயனற்ற அபிவிருத்தி திட்டங்கள்
மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான தீர்க்கமான ஓர் போர் நடைபெறுகின்றது. மக்கள் இந்தப் போரிலிருந்து பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக இந்த போரை வெற்றிகொள்வோம்.
ஹம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார்.

"துறைமுகம் அமைத்தார் கப்பல் இல்லை, மைதானம் அமைத்தார் போட்டிகள் இல்லை, சிறைச்சாலை அமைத்தார் அது நிரம்பியுள்ளது. இந்தக் கள்வர் கூட்டம் பயன்படுத்தும் வாகனங்கள் நாட்டுக்கு தாக்கு பிடிக்கக் கூடியதல்ல.
இவர்களின் வாகனங்கள் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு இரண்டு மூன்று கிலோமீற்றர் மட்டுமே பயணிக்கக்கூடியவை. ரணிலின் வாகனம் 3000 லட்சம் ரூபா பெறுமதியானது. இந்த கள்வர் கூட்டத்தை விரட்டியடிப்போம். நேரடியாக கூறினால் நாம் ஆட்சியை கைப்பற்றுவோம்" என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri