சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா : கேள்வி எழுப்பிய அநுர
சர்வதேச நாணய நிதியத்தை (IMF) விவாதத்திற்கு அழைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
மாறாக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதியை நேருக்கு நேர் விவாதம் நடத்த முன்வருமாறு, அவர் புதிய சவாலை விடுத்துள்ளார்.
பொறுப்பற்ற அறிக்கை
அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தை ஏற்பாடு செய்ய முடியும் எனவும், அந்த விவாதத்தில், இரண்டு கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் விவாதிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க மேடைகளிலேயே தொடர்ந்து தம்மிடம் கேள்விகளை முன்வைக்கிறார்.
இதனையடுத்து, தாம் அவருடன் பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுத்தபோதும், அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் வருவேன் என்கிறார்.
அவரின் கூற்றுப்படி சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே இந்த விடயத்தில் ரணில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று அநுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
