இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து மட்டும் பேசும் அநுர! யாழ். கடற்றொழிலாளர்கள் கவலை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ். வருகையின் போது, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் மாத்திரமே பேசப்பட்டது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தலுக்கு முன் உங்களது தேசிய மக்கள் சக்தி கட்சி கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் அதிகமாக பேசியது. ஆனால் யாழில் வந்து இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினை மாத்திரமே உள்ளது போல ஜனாதிபதி பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
நிலைப்பாட்டில் மாற்றம்
இங்குள்ள உள்ளூர் கடற்றொழிலில் பல சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்கள் நடைமுறையில் உள்ளன.
அதனை தீர்ப்பதாக தேர்தலின் முன் பேசினீர்கள். ஜனாதிபதியாகிய பின் உங்களது நிலைப்பாடு வேறாகவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |