ஜனாதிபதி கண்டி விஜயம்: மகா சங்கத்தினருடன் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மல்வத்து - அஸ்கிரிய பீடங்களின் உப மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பொன்று இன்று(17) பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
மல்வத்து – அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக மத, தேசிய மற்றும் சமூகம் சார்ந்த விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருந்தது.
இதன்போது அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிக்குமார்களுக்கான கல்வி
பௌத்த சாசன விடயங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, பௌத்த விகாரை தேவாலகம் சட்டம், போன்ற பல்வேறு சட்டங்களில் சரியான நேரத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் மற்றும் பிக்குமார்களுக்கான கல்வி தொடர்பாகவும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகள், மல்வத்து - அஸ்கிரிய பீடங்களின் பதிவாளர்கள் உள்ளிட்ட முக்கிய தேரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
