சோழன் உலக சாதனை படைத்த நுவரெலியா மாவட்ட மாணவி
தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி மாணவி சங்கரதாஸ் கண்சிகா என்பவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
நுவரெலியா - கந்தப்பொல ரிலாமுல்ல அருணோதயா தொடக்கப் பள்ளியில் 04ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவி சங்கரதாஸ் கன்சிகா என்ற மாணவியே குறித்த சாதனை படைத்துள்ளார்.
தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறிய அதேவேளை, மனித உடலின் 168 உள் உறுப்புகளின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 04 நிமிடங்களில் கூறினார்.
சிறப்பு திறமை
இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.
மாணவியின் முயற்சி, மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் கோப்பு போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலயக் கல்வி அலுவலக இயக்குநர் டி.எம்.எம்.பி.திசாநாயக பாடசாலையின் தலைமை ஆசிரியர் வீரமலை விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வலயக் கல்வி அலுவலக இயக்குநரும் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டியுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
