ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது! அனுர திட்டவட்டம்
அரசமைப்புக்கு முரணாக எவ்வாறான சதிகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சூழ்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதித் தேர்தலைத்தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வகையில் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார்.
அதனடிப்படையில் சிலர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

எவ்வாறாயினும் அனைத்து சதிகளும் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பே வரும்.
எதிர்வரும் 17ஆம் திகதியுடன் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும்.
அதன்பின்னர் வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.

இதையைடுத்து ஐந்து அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்.
குறிப்பாக ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan