ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (26.10.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபாரிசு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்துள்ளது.

இதன்போது, நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam