யாழில் அரச ஊழியர்களை அவமதித்த அநுரவுக்கு பகிரங்க சவால்
யாழில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு வருகை தந்திருந்த அரச அதிகாரிகளை அவமானப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீரென்று வந்து கேள்வி கேட்காமல் முன்னாயத்தமாக இருந்திருக்க வேண்டும். இது அரச அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக உள்ளது.
அதாவது கடந்த அரசாங்கங்களினால் மற்றும் நிர்வாகிகளினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி தங்களுக்கு விசுவாசமானவர்களாக மாற்றுவதற்கு அநுர அரசாங்கம் முனைகின்றது.
கடந்த அரசாங்கள் செய்ததையயே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது” என சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |