பேரம் பேசும் நிலைக்கு மாறியுள்ள அநுர அரசு! சிறிநாத் எம்.பி குற்றச்சாட்டு
ஊழலை ஒழிப்போம்,வன்முறைகளை இல்லாமல்செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று பேரம் பேசும் நிலைக்கு மாறியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
உங்கள் வாக்குகளை தாருங்கள் அபிவிருத்திகளை செய்கின்றோம் என்று கூறும் நிலைக்கு தேசிய மக்கள் சக்தி வந்துள்ளது.
இலஞ்சத்தின் முதல்படி
இதுதான் இலஞ்சத்தின் முதல்படியாகும்.வாக்குகளை இலஞ்சமாக கேட்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டுள்ளது.
இன்று தலையினை தடவி தலையில் குட்டும் செயற்பாடுகளையே தேசிய மக்கள் சக்தி முழு நாட்டுக்கும் செய்துவருகின்றது.
வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினை கருத்தில்கொண்டு நிதியை ஒதுக்கீடுசெய்யாதவர் இன்று மட்டக்களப்புக்கு வந்து கொங்கிறிட் வீதிகள் அமைப்பதற்கு பணம் தருகின்றேன் என்று சொல்கின்றார். இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
