தமிழ் மக்களின் போராட்டங்களை சிதைத்தவர்களே இவர்கள்..! குடியேற்றங்கள் மீதான குற்றச்சாட்டு
ஜே.வி.பி தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைத்த ஒரு கட்சியாக பார்க்கப்படுகிறது. இந்த கட்சி, ஆர்ப்பாட்டங்களுக்கு கொடி பிடித்தலை செய்யும் அதே சமயம், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்று தராது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிழைப்பு அரசியலுக்கு நாங்கள் வரக்கூடாது சரியான கொள்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன் தினம் (11.06.2026) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் ஆரம்பத்தில் விட்ட பிழைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாறுகள் மழுங்கடிக்கபடுவதும் திரிவுபடுத்தப்படுவதும் தமிழினத்தின் மீது பாரியளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகாவம்சத்தில் விஜயன் வருமுன் இங்கு தமிழர்கள் இருக்கவில்லை என எழுதப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு கிடைத்த அந்த தொல்பொருள் ஆவணங்கள் மிக தெளிவாக வலியுறுத்தியிருந்தது. விஜயன் வரும் முன்பே இங்கு தமிழர்கள் கலாச்சாரத்துடன் இயங்கிய ஒரு கட்டமைப்பாக இருந்தார்கள்.

இலங்கை அரசாங்கம் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாங்கள் உங்களுக்குள் கேட்க வேண்டும் நாங்கள் சரியாக எங்கள் வேலைகளை செய்கின்றோமா ?
வெறுமனவே குற்றங்களை மட்டும் சாட்டாமல் எங்களது பக்கத்தில் இருந்த பிழைகளை நாங்கள் திருத்திக் கொள்கின்றோமா? என்ற கேள்வி எங்களுக்கு இருக்கின்றது.
கல்லோயா திட்டம்
கல்லோயா திட்டம் குடியேற்றும் போது இலங்கையில் நில பங்கீடு எந்த சட்டத்துகள் இருந்ததே அந்த சட்டத்துகள் தான் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் நில பங்கீடு பங்கிடப்படும் போது இங்கு எமது இன விகிதாசாரம் பேணப்படவில்லை என நாங்கள் அறிக்கைகள் வாயிலாக மேடை பேச்சுக்களிலும் சொல்லியிருக்காமல் சட்டரீதியாக நடைமுறைக்கு போயிருக்கலாம் என்பது எனது வாதம். சட்டரீதியான நடைமுறைக்கு போயிருந்தால் அந்த குடியேற்ற திட்டத்தின் வேகத்தை குறைத்திருக்கலாம்.
அதேவேளை நிலம் சார்ந்த காணி சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் அந்த பிரதேசத்தில் சரியான ஒரு பதிவுகளை மேற்கொண்டிருந்தால் சவாலுக்கு உற்படுத்தியிருக்கலாம் பரம்பரை ரீதியாக வாழ்ந்தவர்களை வெளியேற்றி, வெளி ஊர்களில் இருந்து ஆட்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடு எந்த இடத்திலும் இல்லை அந்த பதிவுகள் இருந்திருந்தால் சவாலுக்கு உற்படுத்தி இருக்கலாம். ஆனால் எமது உத்தியோகத்தர்கள் அந்த பதிவுகளை மேற்கொள்ளவில்லை அந்த பதிவுகளை செய்ய வேண்டும் என எமது மக்களும் அதை செய்யவில்லை.

அதனால் இந்த திட்டம் மிக வேகமாக நகர்ந்து வந்துள்ளது. நாங்கள் அதை அங்கு விட்டோம் ஆனால் அதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம் ஒரு கட்டத்தில், 50 ஏக்கர் ஒரு குடும்பத்துக்கும் வழங்க கூடிய ஏற்பாடு இருந்தது.
வடகிழக்கில் இருந்த இயங்கிய வேலை செய்த அந்த உத்தியோகத்தர்கள் சரியாக அந்த 50 ஏக்கர் ஒரு பத்திரத்தை போட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கியிருந்தால் சரியாக ஒரு வருடத்தில் காணிக்கான ஆவணத்தை பெற்றுக் கொள்ள முடியும் அதை விண்ணப்பித்தமா?
காணிக்கான பத்திரம் கொடுத்தோமா? இல்லை என்றார். நாங்கள் பிழையைத்தான் கதைத்து கொண்டிருக்கின்றோம் எங்கள் பக்கத்தில் விட்ட பிழையை இன்னும் திருத்தவில்லை அதற்கான முயற்சியை எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் எங்கள் கைக்குள் முழுவதும் இருந்தது அந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கூப்பிட்டு இந்த இந்த இடத்தில் அரச காணிகள் இருக்கிறது இப்படி பிரித்துக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தால் நடந்திருக்கும் என்றார்.
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam