தாஜூதீன் கொலை: வெகுவிரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படவுள்ள விடயம் - பிரதியமைச்சர் தகவல்
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர், அந்த கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
அவர் மேலும் கூறுகையில், வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே சிலர் கலக்கமடைந்துள்ளனர்.
இந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படும்.
குறிப்பிட்ட ஒரு குடும்பமே இவ்வாறு அளவுக்கதிக கலக்கத்தில் உள்ளது. அந்தக் குடும்பம் ராஜபக்ச குடும்பமா அல்லது வேறு குடும்பமா என்பதை எம்மால் கூற முடியாது.
வாக்குமூலங்கள் பெறப்படும்
ஆனால், விசாரணைகளுக்கமைய உண்மைகள் வெளிப்படுத்தப்படும். கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படும்.
அவ்வாறான வாக்குமூலங்களில் இருந்து கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும்.
யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. விசாரணைகள் மூலம் நிச்சயம் நாட்டுக்கு உண்மைகள் வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
