ஐக்கிய மக்கள் சக்தியுடனான விவாதத்திற்கு மீண்டும் நாள் குறித்த அனுர
சஜித் பிரேமதாசவுடனான(Sajith Premadasa) விவாதத்திற்காக மே 20 ஆம் திகதிக்கு முன்னர் திகதியை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் ஆட்சியாளர்கள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த மே தின பேரணியே ஊழல் ஆட்சியாளர்களின் கீழ் தேசிய மக்கள் சக்தி நடத்தும் இறுதி மே தின பேரணியாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்திற்கு அழைத்தனர். அதற்கு 4 நாட்கள் கொடுத்தோம். 4 நாட்களும் அவர்களுக்கு வேலையாம் எனவே மே 20க்கு முன்னர் விவாத்திற்கான நாளை ஒதுக்குமாறு கோருகிறோம்.
இந்த காலப்பகுதியில் எந்தவொரு நாளிலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
