முன்னாள் ஜனாதிபதிகள் செய்த அதே வேலையை தான் அநுரவும் செய்கிறார்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று(02.09.2026) மட்டக்களப்பில் 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
22வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், உயர் நீதிமன்றத்தில் உள்ள 65 வயதுடைய நீதியரசர்களை 67 வயது வரை நீடிப்பதற்கு 22வது அரசியல் அமைப்பு தொடர்பாக புதிய ஒரு சட்டத்தை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு முன்னர் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இந்த சட்டம் கொண்டுவருவதற்கு காரணம் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றமைய என தேசிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மேல் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்றங்களில் தான் கூடுதலான வழக்குகள் இருக்கிறது என சாதாரண மனிதர்களுக்கும் கூட தெரியும்.

இந்த நிலையில் நீதியரசர்களை 2 வருடம் நீடிப்பதை கொண்டு வரும் செயலைப் போன்று அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தன அவருடைய நண்பரான நெவில் சமரகோன் என்ற சட்டத்தரணியை நீதியரசராக மாற்றினார்.
அவ்வாறே சந்திரக்கா ஜனாதிபதியாக வந்ததும் சட்ட ஆலோசகராக இருந்த மார்க் பெர்னாண்டோ நிறுத்திவிட்டு அவரது நண்பரான சரத் டி சில்வா என்ற மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியவரை நீதியரசராக மாற்றினார்.
நீதியரசராக இருந்த சிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் சொன்னதை செய்யவில்லை என்று அவரை நீக்கிவிட்டு அவர்களுக்கு சாதகமானவரை நீதியரசராக கொண்டு வந்தார்கள் அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.


22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு