ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடியும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் தொடர்பில் முன் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது குறித்து உரிய முறையில் செயற்படாமையினால் ஜனாதிபதிக்கு எதிரான வழக்குத் தொடர்ந்து அவரை தண்டிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் பதிவான மிக மோசமான பேரிடர் கடந்த வாரம் ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த இலங்கையையும் இந்த பேரிடர் தாக்கியதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த பேரிடரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்த நேரத்தில் உதவிய அனைவருக்கும் மக்களின் சார்பில் நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
”இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாது என்றாலும் அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என 2016 ஆம் ஆண்டு தற்போதைய அவை தலைவர் பிமல் ரத்நாயக்க இந்த கூற்றை நாடாளுமன்றில் கூறியிருந்தார்.
எனவே இந்த ஆண்டு பேரிடரை அரசாங்கம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்ததா அல்லது அரசாங்கத்தின் நடவடிக்கையினால் அனர்த்தம் தீவிரமடைந்ததா என்பது குறித்து ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எதிர்க்கட்சிகளினுடையது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அனர்த்தம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி இருந்தது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும் கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புயல் காற்று ஏற்படும் எனவும் 500 மில்லி மீற்றர் மழை பெய்யும் எனவும் பி.பி.சீ எச்சரிக்கை விடுத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் முன் எச்சரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகத் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பேரிடர் ஏற்படப் போவதாக தெரிந்தும் மேற்கொள்ளாத 14 விடயங்களை பட்டியலிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய பட்டியலில், பேரழிவை தீவிரமாக்கிய முக்கிய 14 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
1. மழை நீரை சேமிக்க நீர்நிலைகளை காலியாக்கப்படவில்லை.
2. கால்வாய்கள் பராமரிக்கப்படவில்லை.
3. இடை கால்வாய்களை உருவாக்கும் நடவடிக்கைக்கு இராணுவத்தை பயன்படுத்தப்படவில்லை.
4. ஆறு, கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் சுத்தப்படுத்தப்படவில்லை.
5. கட்டி நிர்மாண ஆய்வு நிறுவனம் உயர்அபாயப் பகுதிகளை முன்கூட்டியே அறிவித்திருந்தாலும் மக்கள் அகற்றப்படவில்லை.
6. அபாயப்பிரதேசங்களில் நெறிமுறைகள் செயல்படுத்தப்படவில்லை.
7. முப்படையினர் ஒருங்கிணைக்கப்படவில்லை.
8. அனுபவமிக்க உயர் அதிகாரி ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படவில்லை.
9. அவசரகாலச் சட்டம் மற்றும் தேசிய பேரழிவு நிலை அமல்படுத்தப்படவில்லை.
10. நாடாளுமன்ற கூட்டங்கள் நிறுத்தப்படவில்லை.
11. தேசிய பேரழிவு மேலாண்மை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
12. தேசிய பேரழிவு குழு கூட்டப்படவில்லை.
13. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அனுபவமிக்க பேரழிவு மேலாண்மை அதிகாரிகள் ஆலோசனைக்கு அழைக்கப்படவில்லை.
14. அரசியலமைப்பில் முக்கிய சேவைகள் மறுக்கப்பட்டு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டன.
இதனால் தற்போது உள்ள ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் இலங்கை குடியுரிமை சட்டங்களின் 298, 327, 328 மற்றும் 329 விதிகளின் கீழ் குற்றவாளியாகக் கருதக்கூடியதாகவும், அதிகபட்சம் ஐந்து வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுத்தவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கவனயீனம் காரணமாக இலங்கையில் இரண்டு ஜனாதிபதிகள் ஏற்கனவே குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும், கோட்டாபய ராஜபக்ச பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியமைக்காகவும் குற்றவாளிகளாக்கப்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக்களின் முன்னுதாரணங்களின் அடிப்படையிலும் ஜனாதிபதி அனுரவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிகக்ப்பட முடியும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam