ரணிலை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் அநுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பகிரங்க விவாதமொன்றுக்கு அழைத்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்மை “எனது நண்பர் அநுர” என விளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தமது அரசாங்கத்தில் ரணிலுக்கு எதிரான தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு தம்மை நண்பர் என விளிப்பதாக அநுரகுமார தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் இவ்வாறு நண்பர் என அழைப்பதற்கு சிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசார மேடைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மிடம் சில கேள்விகளை எழுப்பி வருவதாகவும் அந்தக் கேள்விகளுக்கு இடைக்கிடை பதிலளிக்க தாம் தயாரில்லை என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரலையாக பகிரங்க விவாதமொன்றுக்கு தாம் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவாதத்தின் போது இருவரிடமும் உள்ள கேள்விகளை எழுப்ப முடியும் என அநுரகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |