ஜனாதிபதி அநுரவுக்கு திடீர் உடல்நலக்குறைவா..! சற்றுமுன்னர் வெளியான உத்தியோகபூர்வ தகவல்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
வெளியான பதிவு
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த பதிவில், "ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கதிடீர் சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி போலியான செய்தி என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற பொய்யான தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும், உத்தியோகப்பூர்வ தகவல்களுடன் உறுதிப்படுத்தாமல் அவற்றைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.