வேறு போட்டிகளில் பங்கேற்பது குறித்து அனுதி கருத்து
வேறு எந்தப் போட்டிகளிலும் பங்கேற்பேன் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என உலக அழகி விழாவின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர தெரிவித்துள்ளார்.
அனுதி குணசேகர, நேற்று(02.06.2025) நாடு திரும்பிய நிலையில், உலக அழகி விழாவில் பங்கேற்பதே தனது வாழ்நாள் ஆசை என்றும், அந்த சாதனையை அடைந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தாம், தமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனிமையான அத்தியாயம்
இந்தப் போட்டி ஒரு இனிமையான சவால் என்றும், அது ஒரு சவாலாக இருந்தாலும், அதை ஒரு சவாலாகப் பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிக அழகான பெண்களுடன் தம்மால் தொடர்பு கொள்ள முடிந்தது. எனவே, வாழ்க்கையில் ஒரு இனிமையான அத்தியாயமாக, இதனை பார்ப்பதாக அனுதி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



