ஆசியாவில் இலங்கையை பெருமைப்படுத்தியவர் தமிழர் பகுதிக்கு விஜயம்
உயரம் பாய்தல் நிகழ்வில் இலங்கையில் சாதனை படைத்த எதிர்வீரசிங்கம் ஐயா,கிளிநொச்சிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டு கழக அனுசரணையில் பல்வேறு விளையாட்டுக்களை ஊக்குவிப்பது இவரது வருகையின் முக்கிய நோக்கமாகும் என தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆசிய அளவில் சாதனை
குறிப்பாக எதிர்வரும் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மைதானத்தில் மாலை நேரங்களில் உயரம் பாய்தல்,நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளிற்கான ஆலோசனை எதிர்வீரசிங்கம் ஐயா வழங்குவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவினூடாக இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வீரசிங்கம் ஐயா 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
1958 ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.













அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
