போரதீவுப்பற்றின் பல பகுதிகளிலும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றின் பல பகுதிகளிலும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இவ்வாறு பல பகுதிகளில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வெல்லாவெளி இலங்கை வங்கி ஊழியர்களுக்கு இன்று காலை அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அதில் யாரும் தொற்றாளர்களாக கண்டுபிடிக்கவில்லை.
இதேபோன்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
54 பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவரும் தொற்றாளர்களாக இனங்காணப்படவில்லை.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் எழுமாறான பரிசோதனைகளும்
முன்னெடுக்கப்படுவதாகவும், மூன்றாவது அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்
வகையிலான தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகளும்
முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
