மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் மத்தியில் அன்டிஜன் பரிசோதனை! 6 பேர் தொற்றாளிகளாக அடையாளம்
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 504 பேர் மத்தியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 6 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
மேல் மாகாணத்தில் 11 இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை கொழும்பிலிருந்து பயணிக்கும் நீண்ட தூரப் பேருந்துகளின் பயணிகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் உட்பட்ட 300 பேர் மத்தியிலும் அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் பாடசாலை சேவை சாரதிகள் மத்தியிலும் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக மேல் மாகாணத்தின் வாராந்த சந்தையில் 184பேருக்கும், பாடசாலை சேவை வாகன சாரதிகள் 36பேருக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் எவருக்கும் தொற்றுகள் கண்டறியப்படவில்லை.