மட்டக்களப்பு - கோட்டமுனையில் 21 பேருக்கு கோவிட் உறுதி!
மட்டக்களப்பு - கோட்டமுனை பொதுச் சுகாதார பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 62 பேருக்கு இன்று திங்கட்கிழமை (06) பொது சந்தை சதுக்கத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 21 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோட்டமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை மட்டக்களப்பு பொது சந்தை கட்டட பகுதிக்கு அழைத்துவரப்பட்ட 62 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 21 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
