ஊரடங்கு சட்டத்தை மீறியோருக்கு அன்டிஜன் பரிசோதனை - ஐவர் தொற்றாளர்களாக அடையாளம்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது ஐந்து பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களைக் கண்டறியும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதனின் ஆலோசனைக்கு அமைவாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து இன்று காலை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஊடரங்கு உத்தரவை மீறி வீதிகளில் அநாவசியமாகப் பயணிப்போர், ஊரடங்கு விதிமுறையினை மீறி வியாபார நிலையங்களைத் திறந்து வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோர் உள்ளிட்டோரை பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பேருந்துகளில் ஏற்றிச்சென்று அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
மட்டக்களப்பு நகர்ப் பகுதி, புகையிரத நிலைய வீதி, பார் வீதி மற்றும் கூளாவடி போன்ற பகுதிகளில் அநாவசியமாக நடமாடித்திரிந்தவர்கள் உள்ளிட்ட 70க்கு மேற்பட்டோர் இதன்போது பொலிஸாரினால் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்று அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தினர் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது வீதிகளில் அநாவசியமான நடமாடியவர்களில் ஐந்து பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பார் வீதியில் 99 பேர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 17 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதாகவும் அவற்றில் ஐந்து பேர் வீதியில் அநாவசியமாக நடமாடியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
