மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவில் 100 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை! மூவர் அடையாளம்
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு நகர் அரசடி கிராம சேவகர் பிரிவில் இன்று 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மூர் வீதியில் உயிரிழந்த 79 முதியவர் ஒருவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டதுடன், உயிரிழந்த குறித்த நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று குறித்த பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு மாநகரசபை பொதுச்சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
