கைது செய்யப்படுவதை தடுக்க ராஜித மேற்கொண்ட நடவடிக்கை
தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜித மீது வழக்கு
இந்த மனுவை பரிசீலனை செய்ததன் பின்னர் எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் ராஜித சேனாரத்ன செயற்பட்டதாகத் தெரிவித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.



