பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் சிறீதரன் கருத்து! (video)

S Shritharan Sri Lanka Politician Sri Lanka
By Erimalai Apr 03, 2023 02:40 AM GMT
Report

இன்னொரு இனத்தின் மீது எதை ஏவினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது எனப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.04.2023) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வட்டார நிர்வாக தெரிவும், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு சில நாட்களாக இலங்கையிலே மீண்டும் ஒரு பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது திருத்தச்சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவருகின்றார்கள்.


பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் சிறீதரன் கருத்து! (video) | Anti Terrorism Act

புதிய மாற்றத்துக்குள் வந்தது

ஏற்கனவே இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் மோசமான சரத்துக்கள் நீக்கப்பட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் நியாயமானதாக இருக்கும் என நாம் கருதினோம்.

ஆனால், புதிதாக வருகின்ற பயங்கரவாத திருத்தச்சட்டத்திலே, ஒருவர் பயங்கரவாத தனிச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அவர் மரண தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவார் என்று அதில் தெளிவாகச் சொல்லப்படுகின்றது.

இப்பொழுதுதான் சிங்கள மக்கள் விழித்துக்கொள்கின்றார்கள். சிங்கள இளைஞர் சகோதரிகள் அறகலய போராட்டம் ஆரம்பித்து ஓராண்டை நெருங்கியிருக்கின்றார்கள். சிங்கள மக்கள் இந்த நாட்டில் ஒரு கொடூரமான மனிதரை தங்களுடைய அறகலய போராட்டத்தின் ஊடாக அடித்து இந்த நாட்டைவிட்டே கலைத்தார்கள்.

கலைத்த பிற்பாடுதான், இந்த நாடு ஒரு புதிய மாற்றத்துக்குள் வந்தது. இந்த நாட்டுக்கு தற்பொழுது ஒரு ஜனாதிபதி வந்திருக்கின்றார். கச்சல் மாத்திரைகளை உள்ளெடுப்பதற்காக மேலே இனிப்பு பூசி தருவார்கள். அதுபோன்று ஜனநாயக முலாம் பூசப்பட்ட லிபரல்வாதி என்று சொல்லப்படுகின்ற ஒரு அராயக பயங்கரவாதி இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக நியமனம் பெற்றிருக்கின்றார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் சிறீதரன் கருத்து! (video) | Anti Terrorism Act

மரண தண்டனை 

அவர் ஒருவர்தான் மக்களால் தெரிவுசெய்யப்படாமல், விகிதாசார பட்டியலிலே பாராளுமன்றத்துக்குள் வந்தார். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனம் அதுவாகும்.

அந்த ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றம் வந்து, அங்கே ஏற்கனவே இருக்கின்ற கொள்ளையடித்த 134 பேருடைய வாக்குகளைப் பெற்று அவர் இந்த நாட்டுக்கு ஜனாதிபதி ஆகிவிட்டார். அவர் ஜனாதிபதி ஆகியதும், மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வருகின்றார்.

அந்த சட்டத்தின் ஊடாக யாரும் நிமிர்ந்து பேச முடியாது. நீங்கள் முகநூல்களிலெல்லாம் இனி எழுத முடியாது. வட்ஸ் ஆப் மூலம் படங்களை அனுப்பினால் பிடித்துச் சென்று மரண தண்டனை விதிப்பார்கள். அவ்வாறு நடந்து காண்டால் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்படுகின்றோம்.

நானும் 6 தடவை 4ஆம் மாடிக்கு விசாரணைக்குப் போய் வந்தேன். இது பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் இருக்கின்ற விடயம். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மீண்டும் மக்களைத் தெருவுக்குக் கொண்டுவரும் வேலையை இந்த அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது. குறிப்பாகச் சிங்கள மக்கள் ஒரு காலத்தில் உணரவில்லை.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் சிறீதரன் கருத்து! (video) | Anti Terrorism Act

பயங்கரவாத தடைச்சட்டம்

மன்னாரிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் என நாங்கள் எவ்வாறு கூடியிருந்து மெல்ல மெல்லச் சென்றோம் என எண்ணிப்பாருங்கள். அந்த நேரம் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் நாங்கள் கொல்லப்பட்டோம். அந்த நேரத்தில் சிங்கள மக்கள் அதை உணரவில்லை. சிங்கள சகோதர சகோதரிகள் அதனை யோசிக்கவில்லை.

ஆனால் இன்று அவர்கள் தலையில் இந்த குண்டு மாறி விழுகின்றது. இன்னொரு இனத்தின் மீது எண்ணத்தை ஏறினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன 40 வருடங்களிற்கு முன்னர் இந்த சட்டத்தினை கொண்டு வந்தார்.

தெிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம் இருந்தபொழுது, 3 மாதங்களிற்குள் இந்த பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகவும், இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்டனர். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவில்லை. ஆனாலும் அதனை எதிர்க்காது விட்டது மாபெரும் தவறு.

ஆனால் அவர் தீர்வும் தரவில்லை. மாறாக 40 வருடங்களிற்கு மேலாகக் கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள் போராளிகளையும் இந்த சட்டத்திற்கு ஊடாகவே இந்த மண்ணில் பலி கொடுத்திருக்கின்றோம். இவ்வளவும் நடந்ததற்கு பிற்பாடுதான் சிங்கள மக்கள் விழித்திருக்கின்றார்கள். இது மிகக் அகோரமான சட்டம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் சிறீதரன் கருத்து! (video) | Anti Terrorism Act

நிரூபிக்க முடியாத இனம்

இந்த நாட்டு மக்களைப் பாதிக்கின்ற சட்டம். எங்களுடைய மக்களின் தலைக்குத் திரும்பி வந்திருக்கின்றது. நாங்கள் சுதந்திரமாக வாழவில்லை. எங்களைச்சுற்றி இராணுவ முகாம்கள்தான் இருக்கின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கு மேற்பட்ட படைகள் குவிக்கப்பட்டு நாங்கள் கிட்டத்தட்டத் திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றோம். நான் இங்குப் பேசிக்கொண்டிருக்கும் விடயத்தைக்கூட தொலைபேசி ஊடாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். உளவாளிகள் இருப்பார்கள்.

மோசமான உலகத்திற்குள்தான் கருத்துக்களைக்கூடிப் பேச முடியாமல் சுதந்திரமாக வாழ முடியாத இனமாக தன்னுடைய மொழி, பண்பாடு எனும் அடையாளத்தை நிரூபிக்க முடியாத இனமாகவும் நிலைநிறுத்த முடியாத இனமாகவும் நாங்கள் இருக்கின்றோம் என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US